இந்நிலையில் நான்கு சாலைகளிலும் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் தற்போது வடலூர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் உள்ள தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
வடலூர் பகுதியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள், வடலூர் காவல் ஆய்வாளர் , நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வடலூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர் மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலையை வேறு எந்த இடத்தில் நிறுவலாம் என்று அனைத்து கட்சியினரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது கூட்டத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது கருத்துக்களை பரிமாறியதால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் கூட்டத்தின் முடிவில் பேசிய குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ் குமார் அவர்கள் அனைத்து கட்சியினரையும் ஆலோசனையும் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு வேறொரு தேதியில் மற்றொரு கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment