இதையடுத்து நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து, மேல்முறையீடு செய்த தகுதியான பயனாளிகளுக்கு உரிமைத்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
அப்போது பேசுகையில், மாவட்டத்தில் மொத்தம் 6,08,862 பேர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்தனர். இதில், 4,45,912 பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேல் முறையீடு செய்த 30 ஆயிரம் பேரில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு 22,148 பயனாளிகளுக்கு 2-ஆம் கட்டமாக வழங்கப்படுகிறது.
எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் அரசு அதிகாரிகளின் மூலம் பணம் உங்களுக்கு கிடைக்கின்றது. இதன் மூலம் ஒரு கிராமத்தில் 75 சதவீதம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ.,கள் கோ.ஐயப்பன்(கடலூர்), ம.செ.சிந்தனை செல்வன்(காட்டுமன்னார்கோயில்), ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, எஸ்பி., ரா.ராஜாராம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment