விபத்தில் சிக்கியவரை மீட்ட காட்டுமன்னார்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 November 2023

விபத்தில் சிக்கியவரை மீட்ட காட்டுமன்னார்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன்.


வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள் செல்லும்போது சாலையில் ஆட்டோ  விபத்துக்குள்ளாகி கிடந்ததை பார்த்த காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்களும் உதவியாளர்களும் விபத்திற்கு உள்ளானவர்களை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். 

தனியார் பள்ளியில் நடந்த மாறு வேட போட்டியில் கலந்து கொண்டு வடலூர்  ஆபத்தான புரம்பகுதியில் ஆட்டோவில் பள்ளி குழந்தையும் தாயாரும்  வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது    ஆட்டோவின்  எதிர்ப்புறமாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர் ஆட்டோவில் மோதுவது போல் வந்ததால் ஆட்டோ ஓட்டுநர் சடன் பிரேக் அடித்துள்ளார் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. 


ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயமடைந்தார் ஆட்டோவில் பயணித்த பள்ளி குழந்தையும் தாயாகவும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களோடு உயிர் தப்பினர்‌. விபத்தில் காயம் அடைந்தவர்களை சட்டமன்ற உறுப்பினர் தனது உதவியாளரின் காரில்  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment

*/