சேத்தியாதோப்பு அருகே சேதம் அடைந்த தட்டானோடை சாலையை சரி செய்ய கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 November 2023

சேத்தியாதோப்பு அருகே சேதம் அடைந்த தட்டானோடை சாலையை சரி செய்ய கோரிக்கை.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் தர்மநல்லூர்-தட்டானோடை -பு.ஆதனூர் கிராமச் சாலை செல்கிறது. இந்த சாலை பல கிராமங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. சுமார் 4 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையின் வழியாக பல்வேறு வாகனங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினசரி 300க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். 


இந்த சாலை கடந்த பல மாதங்களாக சேதம் அடைந்துள்ளது. சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கியுள்ளது. இந்த சாலையை தரமான சாலையாக அமைத்து தடை இல்லாமல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி அவசர கால ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் சென்று வருவதற்கு ஏதுவாக உடனடியாக இந்த சாலையை சரி செய்து தருமாறு துறை அதிகாரிகளுக்கு கிராமத்தினரும் பொது மக்களும் கோரிக்கை வைக்கின்றனர். 

No comments:

Post a Comment

*/