முத்தமிழறிஞர்கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 November 2023

முத்தமிழறிஞர்கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்வு.

photo_2023-11-29_22-21-25

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 600 கற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சார் ஆட்சியர் சுவேதா சுமன் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் ஏழை எளிய மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்குவதில் தளபதி தலைமையிலான அரசு மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.


மேலும் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசும் போது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்கள் ஆறு குளம் சாலைக்கு புறம்போக்குகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவலங்களை போக்கிட தளபதி ஸ்டாலின் தலைமையான சமத்துவ நீதி அரசு தமிழகம் முழுவதும் சுமார் 2 1/4லட்சம் பணியாளர்களுக்கு இலவச மணி பட்டா வழங்க முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தந்திருப்பதாக தெரிவித்தார் இந்நிகழ்வில் பல்வேறு கிராமங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/