கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கிடங்கு வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் வளாகத்தைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால் நுகர்வோர் வாணிபக்கழகத்திற்கு வரும் கனரக வாகனங்கள் இயக்க முடியாமல் இருந்தது வந்தது.
இந்த நிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் கணேசன் மூர்த்தி, இன்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வளாகத்தில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்றது இதில் திமுக அவைத் தலைவர் கருணாநிதி விடுதலை சிறுத்தை கட்சியின் வார்டு உறுப்பினர், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நுகர்வோர் வாணிப கழக ஊழியர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment