கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ.மணவெளி, கஸ்பாஆலம்பாடி, பு.சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்காலில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மழை வெள்ளநீர் வெளியேறி வருகிறது. தற்போது வெளியேறும் மழை வெள்ளநீர் சுமாராக 2000 கன அடிஅளவுக்கு செல்வதால் தண்ணீர் செல்லும் வாய்க்கால் குறுகலாக இருப்பதாலும், வழியை ஆகாயத் தாமரைகள் அடைத்திருப்பதாலும் மழை வடிகால் நீர் தொடர்ந்து செல்ல இயலாமல் வாய்க்கால் கரைகளை உடைத்துக் கொண்டு சம்பா சாகுபடி வயல்களுக்குள் புகுந்துள்ளது.
இதனால் பல ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்களில் மழை வெள்ளநீர் மீண்டும் சூழ்ந்துள்ளது. மழைநீர் முழுவதும் வடிவதற்குள் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் பயிர்கள் அழுகிவிடுவதற்கே வாய்ப்பு உண்டு. வேளாண்துறை அதிகாரிகள் தங்கள் வயல்களையும் பயிர்களையும் ஆய்வு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:
Post a Comment