சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரைசாலையில் பைக் மீது கார் மோதி, விபத்து. கார் பள்ளத்தில் உருண்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 November 2023

சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரைசாலையில் பைக் மீது கார் மோதி, விபத்து. கார் பள்ளத்தில் உருண்டது.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே விராணம் ஏரிக்கரை சாலையில் பரிபூரணநத்தம் கிராமம் உள்ளது. இங்கு சாலையில் வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது  எதிர்பாராமல் மோதி நிற்காமல் கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. 

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரில் வந்த குடும்பத்தினர் எந்த வித ஆபத்துமின்றி உயிர்தப்பினர். காரில் வந்தவர்கள் குறித்தும் இருசக்கர வாகனத்தில் வந்து படுகாயம் அடைந்தவர் குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முக்கியமாக இந்த சாலைப் பகுதி விபத்து நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது..மேலும் இந்த விபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரும் இரு சக்கர வாகனமும் அவ்விடத்தை விட்டு அகற்றப்படாமல் அப்படியே கிடந்ததால் என்ன நடந்தது என்று வேடிக்கை பார்க்க அதிர்ச்சியுடன்பலர் ஒன்று கூடினர்.


மேலும் அந்த சாலையில் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சென்று வேடிக்கையும் பார்த்ததால் அவ்விடத்தில் வாகனநெருக்கடி ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

*/