இருந்தாலும் கரும்புப் பயிரிடுவதை நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் குறைந்த அளவில் கரும்பு பயிரிட்டு தற்போது அவை அறுவடைக்குத் தயாராகி விட்டன. அதனால் கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். அதன்படி முன்கூட்டியே கரும்புகளை பதிவு செய்ய வேண்டும்.
கரும்புக்கு கட்டுபடியான விலையை வழங்க வேண்டும். மற்றும் கரும்பு வெட்டுக் கூலியை அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் பன்னீர் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கையாக வைத்து வருகின்றனர். பன்னீர் கரும்பு விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மென்மேலும் அதன் பரப்பளவை குறைத்து விடாமல் தடுப்பதற்கு அரசுதங்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தும் பன்னீர்கரும்பு பயிரிடும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:
Post a Comment