கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து ஏரியின் பாதுகாப்பு கருதி விஎன்எஸ்எஸ் மதகுமூலம் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்தத்தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தேக்கப் பட்டு பின்னர் குமார உடைப்பு வாய்க்கால் மூலம் வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரி மொத்த நீர்மட்டம் 47.50அடியில் தற்போது 45.85 அடி உள்ளது.ஏரிக்கு நீர் வரத்து இல்லை. ஏரிப்பகுதி மற்றும் ஏரிக்கு நீர் வரத்துப் பகுதியில் போதுமான மழை இல்லாமல் போனதால் நீர்வரத்து சுத்தமாக நின்று போனது. இருந்தாலும் மழைக்கால ஏரி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கருதி விஎன்எஸ்எஸ் மதகு மூலம் தற்போது 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போலவே பாசன வாய்க்கால்கள் மூலமும் 70 கன அடி தண்ணீர் பாசனம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment