தென்குத்து நடுத்தெரு பகுதியில் சுமார் 200 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அங்கு சுமார் 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் நீண்ட நாட்களாக உள்ளதாக கூறப்படுகிறது தொட்டிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மூலம் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக எந்த ஒரு முன்னறிவிப்பும் மாற்று ஏற்படும் இன்றி இரவு நேரத்தில் திடீரென குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் குடிநீர் தொட்டி திடீரென அகற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்புகையில் அவர் முறையான பதில் அளிக்காமல் குடிநீர் தொட்டியின் பராமரிப்பு ஆண்டு காலம் முடிவடைந்து விட்டதால் குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டதாக தெரிவித்தார் மேலும் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதனை ஏற்று ஊராட்சி நிர்வாகம் குடிநீருக்கான மாற்று ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தது நிலையில் குடிநீருக்கான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டாலும் தெருகளில் உள்ள பைப்புகளில் முறையாக குடிநீர் வராமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர் மேலும் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வடலூர் காவல் நிலையத்தில் சாலை மறியலில்ஈடுபடப் போவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு வடலூர் காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்க சென்றனர் பின்னர் ஊராட்சி தலைவரை வரவழைத்த வடலூர் காவல் ஆய்வாளர் மூன்று தினங்களில் குடிநீருக்கான மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும் என ஊராட்சித் தலைவரிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது ஆனால் காவல்துறையின் அறிவிப்பை பொதுமக்களின் அவதியையும் துளியும் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் இன்று வரை குடிநீருக்கான மாற்று ஏற்பாட்டை செய்யப்படவில்லை என்று அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர் மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் வாக்கு செலுத்தாததால் தென்குத்து நடுத்தெரு பகுதிக்கு எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர் மேலும் பலமுறை சாலை வசதி அமைத்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் இன்று வரை வானதிராயபுரம் பகுதியில் மத்திய மாநில அரசு திட்டங்களின் கீழ் புதிய சாலைகள் மற்றும் என்எல்சி இந்தியா சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு வந்தாலும் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவருக்கு வாக்களிக்காததால் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் தங்கள் தெருவிற்கான சாலை வசதிகளை தாங்களே செய்து கொள்ளும் விதமாக முதற்கட்ட நடவடிக்கைகளாக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டி நிதி திரட்டி தங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் உள்ள பள்ளங்களை டிராவல் மண் கொண்டு நிரப்பியதாக கூறுகின்றனர் மேலும் ஊராட்சி வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை செய்து வரும் தமிழக அரசுக்கு அவ பேரு விளைவிக்கும் வகையில் தேர்தலில் வாக்கு செலுத்தவில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு சுயலாபத்திற்காக பொதுமக்களை வஞ்சிக்கும் இது போன்ற ஊராட்சி மன்ற தலைவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஊராட்சிகளில் நடைபெறும் பணி தினமும் ஆய்வு செய்ய வேண்டும், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் பற்றாகுறையை உடனே சரி செய்து தர கோறியும் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு திட்டங்களை தவறாக பயன்படுத்தும் ஊராட்சி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment