நியூ லைட் சாரிட்டபுல் டிரஸ்ட் சார்பில் நெய்வேலி அடுத்த குரவன் குப்பத்தில் உள்ள டிவைன் கிராஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் நியூலைட்மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்கள் இல்லத்தில் திபாவளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளி தலைமையாசிரியர் சகாய பாக்கியம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் விப்ஸ் அமைப்பின் தலைவர் மனநல மருத்துவர் டாக்டர் விஜயகுமாரி கலந்து கொண்டார் இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பின்னர், விப்ஸ் பொருளாளர் பார்வதி பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பாசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment