மழைநீர் வாய்க்காலுக்கு நடுவே உள்ள மின்மாற்றி மழை நீர்செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 November 2023

மழைநீர் வாய்க்காலுக்கு நடுவே உள்ள மின்மாற்றி மழை நீர்செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம்.


கடலூர் மாவட்டம் வடலூர் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் குறவர் குடியிருப்பு அருகே வடலூர் சுற்றியுள்ள கிராம புறங்களுக்கான வடலூர் மின் பகிர்மான கழக உதவி மின் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது இவ்அலுவலகத்திற்கு எதிரே வடலூர் டி எஸ் கே பெட்ரோல் பங்க் முதல் கருங்குழி சாலை வரை மழை நீர் வடிகால் வாய்க்கால் உள்ளது நீண்ட நாட்களாக இவ்வாய்க்கால் தூர்வாரப்படாமல் முற் செடிகள் படர்ந்து புதர்கள் போன்று காணப்பட்டது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்மையில் வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்றது இந்நிலையில் மின்வாரியம் அலுவலகம் எதிரே வாய்க்கால்களின் நடுவில் மின்மாற்றி  உள்ளது இந்த மின்மாற்றிக்கு தாங்கிப் பிடிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஸ்டே கம்பி வாய்க்கால் ஓரத்தில் புதைக்கப்பட்டுள்ளது மேலும் வாய்க்கால்களின் ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு நீண்ட நாட்களாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


வடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிறு தினங்களாக  இரவு நேரங்களில் பலத்த மழையும் பகல் நேரங்களில் விட்டு விட்டு மழை அவ்வப்போது பெய்து வரும் நிலையில் நடேசன் நகர் மற்றும் சவேரியார் நகர் ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் இவ்வாய்க்கால் வழியாக சென்று வருகிறது மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து இவ் வாய்க்காலில் சென்று வருகிறது.


இந்நிலையில் மழைநீர் அதிக அளவில் இவ்வாய்க்கால் வழியே செல்லும் பொழுது வாய்க்காலுக்கு நடுவே உள்ள மின்மாற்றி சேதம் அடைந்து பெரும் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது மேலும் மின்வாரிய அலுவலகம் எதிரே இதுபோன்று மின் மாற்றி உள்ளதால் அதிகாரிகள் கண்களுக்கு  தென்படவில்லை என்று அப்பகுதியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர் மேலும் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நுற்றுகனக்கான  கனரக மற்றும் இலகரக வாகனங்கள் தினமும் கடந்து வரும் நிலையில் மழை தொடர்ந்து அதிகரித்தால் வாய்க்காலில் நீர்வரத்து அதிகரிக்கும் இதனால்  மின்மாற்றி அருகாமையில் மண்ணரிப்பு ஏற்பட்டு மின் மாற்றி கீழ் சாயம் அபாயம் உள்ளது தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள இன்னுமா மாற்றி என்பதால்  வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்து சாலையை கடந்து வருகின்றனர் எனவே மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி மின்மாற்றியை மற்றும் மின் கம்பங்களை வேறு இடத்திற்கு அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/