சேத்தியாத்தோப்பு அருகே புதிய மதகில் ஷட்டர் பொருத்தும் பணி விவசாயிகள் மகிழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 November 2023

சேத்தியாத்தோப்பு அருகே புதிய மதகில் ஷட்டர் பொருத்தும் பணி விவசாயிகள் மகிழ்ச்சி.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தின் பகுதியில் உள்ள கோதாவரி வாய்க்காலில்  பாசன மதகு கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக ஷட்டர் பொருத்தாமல் இருந்து வந்தது. இதனிடையேபாசன மதகில் ஷட்டர் பொருத்தப்பட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை எழுப்பி வந்தனர்.


விவசாயிகளின்தொடர்  வலியுறுத்தலையடுத்து தற்போது புதிய மதகில் ஷட்டர் பொருத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால்  விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய மதகில் ஷட்டர் பொருத்தா விட்டால் வடிகால் வாய்க்காலில் வரும் அதிகப்படியான நீர் வயல் பகுதிகளில் புகுந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விவசாயிகள் இந்த ஷட்டர் பொருத்தும் பணியை மகிழ்ந்து வரவேற்று பாராட்டு தெரிவக்கின்றனர்.  

No comments:

Post a Comment

*/