தென்னாற்காடு மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பெருந்தலைவர் வீரவேங்கை முட்டம் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 34-வது நினைவு நாள் பேரணி, பொதுக்கூட்டம் 11-11-2023, சனிக்கிழமை, மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. தென்னாற்காடு மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காட்டுமன்னார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் முட்டம் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 34-வது நினைவுநாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் 11-11-2023 அன்று நடைபெற உள்ளது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், தஹிமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக வர்த்தகர் அணி துணை தலைவர், சட்டமன்ற அரசுகொறடா கோவி.செழியன், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், தமிழ்நாடு தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் பதனிடும் தொழிலாளர் நலவாரிய தலைவருமான நெல்லிக்குப்பம் சு.புகழேந்தி, மாவட்ட பொருளாளரும், எம்.ஆர்.கே கல்வி அறக்கட்டளை தலைவருமான எம்.ஆர்.கே.பி.கதிரவன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
குடந்தை ஜேம்ஸ் பாண்ட் இன்னிசை நிகழ்ச்சியுடன், பெருந்தலைவரின் மோவூர் நினைவிடத்தில் இருந்து நடைப்பெறும் ஊர்வலத்திலும், காட்டுமன்னார்கோயில் செட்டித் தெருவில் நடைப்பெறும் பொதுக்கூட்டத்திலும் முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், ஒன்றிய பெருந்தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள், இந்நாள் கூட்டுறவு சங்க பிரிதிநிதிகள், திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி, மாணவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி,தொண்டரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி, மீனவர் அணி உள்ளிட்ட மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
எம்.ஆர்.கே. நினைவு கல்வி அறக்கட்டளை, காட்டுமன்னார்கோயில் ஒன்றிய, நகர மற்றும் இளைஞரணி, எம்.ஆர்.கே. நற்பணி மன்றம் ஆகியோர் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
.jpg)
No comments:
Post a Comment