தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிளான கைப்பந்துப் போட்டி, சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட சீனியர் பிரிவில் மாவட்ட அளவில் பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றிப்பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதிப்பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் திருமதி.சி.பழனியம்மாள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் திரு.சி.ஜெகஜீவன்ராம், திரு.ஜெ.ஜெகன்குட்டிமணி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கே.குணசேகரன், மாட்டக் கல்வி அலுவலர் திரு.விஜயக்குமார் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.ஜெ.முத்துக்குமார், பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஜ.அப்துல் அஜீஸ், இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பாரட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment