தொடர்ந்து சத்திய ஞான சபை வளாகத்தில் உள்ள அணையா அடுப்பு, கல்பட்டையா சன்னதி ஆகியவற்றை பார்வையிட்டார், வடலூர் சத்திய ஞான சபை நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் அமைச்சர் வருகையொட்டி வள்ளலாருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பசித்தோருக்கெல்லாம் ஓய்வின்றி உணவு சமைத்து வரும் வள்ளலார் ஆரம்பித்து வைத்த அணையா அடுப்பில் விறகு கட்டைகளை போட்டு தொட்டு வணங்கினார், தொடர்ந்து வடலூர் அருகே உள்ள கருங்குழி பகுதியில் வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய இடம் மற்றும் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள வள்ளலார் சித்தி வளாகம் ஆகிய பகுதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார் நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment