வடலூரில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2023

வடலூரில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம் வடலூர் சபை பேருந்து நிலையத்தில் வடலூர் நகர திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர்.

திமுக கடலூர் மாவட்ட  பொருளாளர் M.R.K.P கதிரவன் அவர்கள் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கி தொடங்கி வைத்தார் மேலும் நிகழ்ச்சியில் 200 மேற்பட்ட பொதுமக்களுக்கு   உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகரச் செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/