கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு முழு கொள்ளளவு 7.5 அடி எட்டியது .இந்நிலையில் இதனையடுத்து அணைக்கட்டில் இருந்து வெள்ளாற்றில் வினாடிக்கு 600 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது .அணைக்கட்டில் நான்கு ஷட்டர்கள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரே இரவில் 17 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீர் திறக்கும் அளவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பகுதிகளில் அதிகபட்ச மழையாக 17 சென்டிமீட்டர் பெய்துள்ள நிலையில் தற்போது பல இடங்களில் இருந்து வந்துசேரும் மழை வடிகால் நீர் மற்றொரு வழியான சேத்தியாத்தோப்பு குமார உடைப்பு வாய்க்கால் மற்றும் 25 கண் மதகு ஆகியவற்றின் மூலம் வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment