புவனகிரியில் அதிமுக ஒன்றியப் பெருந்தலைவர் சி என் சிவப்பிரகாசம் தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 November 2023

புவனகிரியில் அதிமுக ஒன்றியப் பெருந்தலைவர் சி என் சிவப்பிரகாசம் தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் சி.என். சிவபிரகாசம்  தலைமையில்  ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற குழு கூட்டத்தில் நடப்புப் பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நோய்த்தொற்று ஏற்படுத்தும், தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் வழி பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. 


இதில் அதிமுக கவுன்சிலர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முடிவில் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவபிரகாசம் குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

No comments:

Post a Comment

*/