வடஹரிராஜபுரத்தில் நூறாண்டை தொட்ட ஆலமரம் மழையில் வேரோடு சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 November 2023

வடஹரிராஜபுரத்தில் நூறாண்டை தொட்ட ஆலமரம் மழையில் வேரோடு சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம்- சேத்தியாத்தோப்பு சாலையில் வடஹரிராஜபுரம் கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் நூறாண்டு பழமையான மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருந்து வந்தது. அகன்றகிளைகளோடும் பரந்து விரிந்து பலருக்கும் நிழலும் தந்தது. பேருந்துக்கு காத்திருப்போர் என் மரத்தின் நிழலில  நின்று தான் பேருந்துக்குக் காத்திருப்பார்கள்.


இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் மாலை வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த ஆலமரம் மட மடவென சத்தத்துடன் சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்தபோது வயல்வெளிக்கு செல்லும், விவசாயிகள் பயன்படுத்தும் வாய்க்கால் பாலத்தையும் உடைத்தது. அப்போது அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 


மரம் விழுந்து கிடக்கிற இந்த பாலத்தைக் கடந்து விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதாலும், தண்ணீர் செல்லும் வாய்க்காலை அடைத்துக் கொண்டு இருப்பதால் தண்ணீர் மேலே செல்வதற்குஏதுவாகவும்அதிகாரிகள் உடனடியாக இந்த ஆலமரத்தினை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராமத்தினரும், விவசாயிகளும் தெரிவிக்கின்றனர். 

No comments:

Post a Comment

*/