கடலூர் மாவட்டம் வடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சியினர் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியுமான சங்கரையா அவர்களின் மறைவை ஒட்டி மௌன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் நெய்சர் அருகே உள்ள சிஐடியு அலுவலகத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறப்பட்டு வடலூர் நான்கு முனை சந்திப்பு வழியாக அமைதிப் பேரணியாக சென்றனர் இறுதியில் வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் பேரணி நிறைவு பெற்றது பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் சங்கர் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறும் அவர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் இளங்கோவன் மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 866755706.

No comments:
Post a Comment