சேத்தியாத்தோப்பு அருகேசாலையில் உள்ள பள்ளத்தில் இரு சக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் பெண்மணிகாயம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 November 2023

சேத்தியாத்தோப்பு அருகேசாலையில் உள்ள பள்ளத்தில் இரு சக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் பெண்மணிகாயம்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமப்பகுதியில் புவனகிரி விருத்தாசலம் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் எந்நேரமும்  வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால் இந்த சாலையில் தொடர்ந்து பரபரப்பான போக்குவரத்து சூழ்நிலையே காணப்படும். இவ்வாறான நிலையில் புவனகிரியில் இருந்து விருத்தாசலம் வரை உள்ள 20 கிலோமீட்டர் தூரத்தில் சாலையில் ஆங்காங்கே  சிறு சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுபள்ளங்கள் மழை நீர் தேங்கி நின்று ஜல்லி பெயர்ந்து பெரிதாகிக் கொண்டிருக்கிறது. 


இந்த பள்ளங்களில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வரும் பல்வேறு கிராம மக்களும், வேலை முடிந்து வீடு திரும்புவோரும் எதிர்பாராமல் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்கின்றனர். இவ்வாறான நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்மணி ஒருவர் சாலையில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராமல் இறங்கி ஏறி  வாகனம் தடுமாறியதால் சாலையில் விழுந்து காலில் பலமாக அடிபட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிகிராம மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 


இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும் போது சாலையில் உள்ள பள்ளங்களை போதுமான அளவு பராமரித்து வந்தால் சிறு பள்ளங்கள் பெரிதாகாமல் சாலை பாதுகாக்கப்பட்டு இது போன்ற விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/