கடலூர், மாவட்டம் வடலூர் விருத்தாசலம் மெயின் ரோட்டில் வசிப்பவர், முகமதுகனி என்பவரது மகன் பீர்முகமது (60) அதே பகுதியில் இட்லி மாவு அரைக்கும், மாவு மில் நடத்தி வருகிறார், இவர் விருத்தாசலம் வடலூர் மெயின் ரோட்டில், வடலூர் நான்கு முனை சந்திப்பு நோக்கி நடந்து சென்றபோது, பிரபல ஜவுளிக்கடை அருகே பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார் பின்னர் அங்கிருந்தவர்கள் பீர் முகமதுவை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி பீர் முகமது உயிரிழந்தார், விபத்து குறித்து பீர் முகமது வின் மகள் சம்சு நிஷா கொடுத்த புகாரின்பேரில் வடலூர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment