குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளால் நேரு மாமா என்று அழைக்கப்படும் நேரு அவர்களின் படத்தை வரைந்த அசத்திய மாற்றுத்திறனாளி மாணவன். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 November 2023

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளால் நேரு மாமா என்று அழைக்கப்படும் நேரு அவர்களின் படத்தை வரைந்த அசத்திய மாற்றுத்திறனாளி மாணவன்.


இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இவர் குழந்தைகள் மீது அதிகம் அன்பு கொண்டவர் என்பதனால் இவரின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வடலூர் புதுநகர் அரசு பள்ளியில் 9 வகுப்பு பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவன் பிரித்திவிராஜ் நேரு அவர்களின் உருவப்படத்தை ஓவியம் மூலம் தத்துரூபமாக வரைந்து அசத்தி உள்ளார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வானதி ராயபுரம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஆர் கே சிட்டி பகுதியில் வசித்து வரும் அருள் பிரகாஷ்- செலின் பெரியநாயகமேரி அவர்களின் மூத்த மகன் பிரித்திவிராஜ் வயது 15   இவர் புதுநகர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயன்று வருகிறார் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிறு வயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்ததுள்ளார்.


மேலும் பல்வேறு ஓவியங்களை வரைந்து உள்ள பிரித்விராஜ் அரசியல் தலைவர்களான டாக்டர் கலைஞர், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேசிய தலைவர்களான கர்மவீரர் காமராஜர், பகத்சிங், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் படங்களை தத்ருபமாக வரைந்து வசதி வருகிறார் மேலும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உருவ படத்தை அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வரைந்து அசத்தியுள்ளார்.


தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் இயல்பாக இயங்க முடியாத நிலையில் பெற்றோர் உதவியுடன் வீல் சேர் மூலம் பள்ளிக்கு சென்று வருகிறார், மேலும் பல ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்ற பிரித்விராஜ் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தனது தனி திறமையை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்பொழுது  குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வரைந்து உள்ள இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது திறமைக்கு உடல் ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக தம்மிடம் உள்ள தனித் திறமைகளை கொண்டு மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ஓவியம் வரைவதில் திறமையாக அசத்தி வரும் மாணவனுக்கு தமிழக அரசு முன் வந்து அங்கிரித்து அடையாள படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் குரலாக உள்ளது.


- தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 

No comments:

Post a Comment

*/