இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த இரண்டு நாட்களாக கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் வாய்க்காலில் மழை நீர் அதிக அளவில் வெளியேறி வருவதால் பரவலாறு பாலத்தில் மழை நீர் அதிக அளவில் செல்வதால் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது மிகவும் பழமையான குறுகிய பாலம் என்பதால் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் இப்பாலத்தில் ஊர்ந்து சென்று வருகின்றனர் மேலும் பாலத்தில் நடுவே உள்ள குண்டும் குழியுமான பள்ளங்களில் நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழியர்கள் தற்காலிகமாக சம்பல் கலவை கலந்த ஜல்லி கற்களை கொட்டு சரி செய்து வருகின்றனர்.
மேலும் புதிய பாலம் கட்டும் பணி அருகே நடந்து வரும் நிலையில் புதிய பலத்திற்காக பில்லர் அமைபதற்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் உள்ள மண் வாய்க்கால் நடுவே கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் வேகமாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் அதிகரித்து பாலத்திற்கு மேலே எழும்ப வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இப்பாலத்தை கடந்து வருகின்றனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:
Post a Comment