பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த நாளை நினைவு கூறும் விதமாக இன்று வடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் மற்றும் இதர அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சியின் நெய்வேலி தொகுதி பொதுச் செயலாளர் ஆ.வு வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர் இறுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இயற்றிய சட்டத்தையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ள நீதி சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை கடைப்பிடிப்போம் என உறுதி மொழி ஏற்றனர்.
நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவசக்தி வடலூர் நகரச் நிர்வாகிகள் கண்ணன், பங்க் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment