புவனகிரி அருகே நான்கு வழிச் சாலையில் ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் பாலப் பணிகள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 November 2023

புவனகிரி அருகே நான்கு வழிச் சாலையில் ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் பாலப் பணிகள்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு கிராமப் பகுதியில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் பரவனாறு உள்ளது. இதன் மேல் குறுகிய பழமையான சேதமான பாலம் இருந்து வருகிறது. இது சேதமடைந்து பலரையும் அச்சுறுத்தி வருகிறது. இப்பகுதியில் தஞ்சை- விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆமைவேகத்தில் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தற்போது போக்குவரத்துக்குப் பயன்பட்டு வரும் இந்த குறுகிய சேதம் அடைந்த பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள், நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் கடும் அவதி அடைந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். பல வாகனங்கள் நடுவிலேயே சிக்கிக் கொண்டு போக்குவரத்து துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.  ஒவ்வொரு பருவ மழைக்காலம் துவங்கும் போதும் பாலத்தில் தொடர்ந்து கடுமையான சேதம் ஏற்பட்டு வருகிறது.


இந்த பரவனாற்றுப் பாலம். உடனடியாக அருகில் கட்டப்பட்ட வரும் நான்கு வழி சாலை புதிய பாலத்தை விரைந்து பணிகள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள பாலம் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டால் வாகனங்கள் உள்ளிட்ட பலவும் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும். வட மாவட்டத்தையும்-தென் மாவட்டத்தையும் இணைக்கும் போக்குவரத்து துண்டிப்பு உருவாகும். இவ்வாறு பல சிரமங்கள்,அடைந்து வரும் வாகன ஓட்டிகள், கிராம மக்கள், விவசாயிகள் கூறும்போது இந்த ஆற்றில் கட்டப்படும் புதிய நான்கு வழிச்சாலை பாலத்தை போர்க்கால அடிப்படையில் பணிகள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/