இந்த முகாமை லயன்ஸ் கவர்னர் சுபாஷ் சந்திர போஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முகாமிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் காட்டுமன்னார்கோவில் திமுக எம்எல்ஏவும் ஆதிதிராவிடர்நல மாநில அணி தலைவருமான மருதூர் ஏ.இ ராமலிங்கம் பங்கேற்று சிறப்பித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ராமலிங்கம் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி மகாத்மா காந்திஆராய்ச்சி மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீதன்யா தலைமையில் 35 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை முதுகு இடுப்பு வலி மருத்துவம் சர்க்கரை ரத்த கொதிப்பு இருதய நோய் மருத்துவம் கண் மருத்துவம் காது மூக்கு தொண்டை மருத்துவம் குடல் நோய் மற்றும் இரைப்பை சிகிச்சை சளி இருமல் காய்ச்சல் குழந்தை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளித்தனர்.
மேலும் இந்த முகாமில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்னக்கிளி இளந்திரையன் ஊராட்சி செயலர் பழனி இளங்கோவன் லைன்ஸ் சங்கம் பிஆர்ஓ செந்தில் மருதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். முகாமில் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர் முடிவில் லயன்ஸ் சங்க பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
- தமிழக குரல் செய்தியாளர் வீ. சக்திவேல்

No comments:
Post a Comment