அரசு அலுவலகத்திற்கு உள்ளே தேங்கியுள்ள கழிவு நீரால் சுகாதார சீர்கேடு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 November 2023

அரசு அலுவலகத்திற்கு உள்ளே தேங்கியுள்ள கழிவு நீரால் சுகாதார சீர்கேடு.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது இந்தவளாகத்தில் நீதிமன்றம் ,குழந்தைகள், வளர்ச்சி திட்ட அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம் , வட்டார கல்வி அலுவலகம் ஆகிய அலுவலங்கள் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகின்றது இங்கு ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிட பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அருகே உள்ள செப்டிக் டேங்க் நிரம்பி வெளியே அலுவலக நுழைவு வாயில் அருகே வழிந்து ஓடுவதால் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் அவல நிலை தொடர்கிறது.

தினமும் அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் நுழைவு வாயில் வழியே சென்று வருகின்றனர்  அத்தகைய நுழைவு வாயிலில் கழிவுநீர் வழிந்தோடி நோய் தொற்று பரவும் நிலை தொடர்வது அதிகாரி கண்களில் தென்படவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் நலனில் அக்கறை கூர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

*/