கண்கள் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 November 2023

கண்கள் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.


என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  20 சதவீதம் தீபாவளி  போனஸ் வழங்க கோரி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் கண்கள் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் தர மறுக்கும் என்எல்சி நிறுவனத்தை கண்டிக்கும் வகையில் இன்று நிர்வாகத்தின் தலைமை அலுவலகத்தை தீபாவளியன்று முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர் ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கதினர்.  இதனையடுத்து இன்று காலை தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஒன்றிணைந்தனர். அப்பொழுது அங்கு இருந்த காவல்துறையினர் முற்றுகையிட இங்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். 


இதனையடுத்து தொழிற்சங்கத்தினர் நெய்வேலி நகரம் பெரியார் சதுக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்து சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் தொழிலாளர்கள் 150 க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து அவரவர்  கண்கள் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சங்க சிறப்பு தலைவர் சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


அதில் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுமார் 10,000 மேற்பட்ட இன்கோசர்வ் மற்றும் பல தரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். என்எல்சி நிர்வாகம் 2023 ல் கடந்த 6 மாதத்தில் மட்டும் 1500 கோடி லாபம் ஈட்டியுள்ளது. லாபம் வருகின்ற நிறுவனத்தில் அதில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு ஏன் போனஸ் வழங்க மறுக்கப்படுகிறீர்கள். அப்படி என்றால் அதிகாரியான  உங்களுக்கு எப்படி போனஸ் வழங்குகிறார்கள் எந்த சட்டத்தில் அடிப்படையில் எடுத்து கொள்கிறீர்கள் ஆகையால் தொழிலாளர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் 8.33 சதவிகிதம் போனஸ் வேண்டாம் 20 சதவீதம்   போனஸ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  


இதில் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/