கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கலைத் திருவிழா போட்டியில் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராமிய நடன போட்டியில் பங்கு பெற்ற கவிப்பிரியா, அனுசியா, காவியா, பிரேம் குமார், சைலஜா, அனுஷ்கா, அகிலன், தீபிகா மற்றும் ரஞ்சனா ஆகிய மாணவர்கள் இரண்டாம் இடமும், தனி நடிப்பு போட்டியில் கலையரசி மூன்றாவது இடம் பெற்று சாதனை பெற்றுள்ளனர்.
இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் கௌரி, உதவி தலைமையாசிரியர் வரதராஜ், ஆசிரியர்கள் ரேனுகாதேவி, காந்திமதி, ஞானசங்கர், தனபால், சுதா மற்றும் பயிற்சி அளித்த மணிமாலா ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:
Post a Comment