கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்குழி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, கருங்குழி ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் சுப்புமுருகன் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.
கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் கருங்குழி ஊராட்சியில் தமிழக அரசு திட்டங்கள் மூலம் செயல்படுத்தபட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் எடுத்துரைத்தினர் மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் விரைவில் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை ,மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்தனர், கூட்டத்தில் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் திமுக வடலூர் நகர் மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தன்.தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:
Post a Comment