கடலூர் மாவட்டம் வடலூர் நடேசன் நகர் சர்வேயர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் தடுப்பு மற்றும் மருந்து துறை அறிவுறுத்தலின்படி நோய் தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய பயிற்சி மருத்துவர்கள் அபூரார், ராமநாதன் சுகாதார ஆய்வாளர் சசிதரன், செவிலியர் கலைச்செல்வி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மேலும் கடலூர் நோய் தடுப்பு மற்றும் மருந்து துறையின் ஏற்பாட்டின் கீழ் காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கவும் மருத்துவ ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment