நெய்வேலி என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளருக்கு 20% போனஸ் வழங்க கோரி சுரங்கம் 1 நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2, அனல் மின் நிலையம் ஆகிய பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கு தீபாவளி போனஸ் 20% வழங்க கோரி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் 20% போனஸ் வழங்கவில்லை இதனால் தொழிலாளர்கள் என்எல்சி சுரங்கம் 1 நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் பின்னர் அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து 20% போனஸ் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062


No comments:
Post a Comment