வடலூர் சீயோன் மேல்நிலைப் பள்ளியில் சிறு தானிய உணவுத் திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 November 2023

வடலூர் சீயோன் மேல்நிலைப் பள்ளியில் சிறு தானிய உணவுத் திருவிழா நடைபெற்றது.


சர்வதேச சிறுதானிய வருடம் 2023 முன்னிட்டு கடலூர் சேர குப்பம் பகுதியில் உள்ள சீயோன் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது, சியோன் பள்ளியின் நிறுவனர் சாமுவேல் மற்றும் தாளாளர் பிரவீன் சாமுவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமுதம் மரசெக்கு என்னைய் உரிமையாளர் கண்மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவில் ஒன்றாம் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் சிறுதானிய உணவை பெற்றோர்கள் உதவியுடன் சமைத்துக் கொண்டு வந்து காட்சிப்படுத்தினார் பின்னர் அனைத்தையும் பார்வையிட்ட விழா குழுவினர் மதிப்பெண் அடிப்படையில் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


மேலும் வளர்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் பேசுவையில் தற்பொழுது அதிகரித்து வரும் நோயிலிருந்து நம்மை பாதுகாக்க சிறுதானிய உணவுகளை அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து பழக வேண்டும் மேலும் நமது முன்னோர்கள் அனைவரும் சிறு தானிய உணவுகளை உட்கொண்டதால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர் என பேசினர். 

No comments:

Post a Comment

*/