புவனகிரி அருகே கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவனை தொடர்ந்து ஒறுமையில் பேசி மன அழுத்தத்தை உருவாக்கிய ஆசிரியரால் பரபரப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 November 2023

புவனகிரி அருகே கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவனை தொடர்ந்து ஒறுமையில் பேசி மன அழுத்தத்தை உருவாக்கிய ஆசிரியரால் பரபரப்பு.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் கிருஷ்ணாபுரம் பகுதி  அதனை சுற்றியுள்ள ஜெயங்கொண்டான் மருதூர் தலைக்குளம் ஆலம்பாடி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில் மருதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் வள்ளல் பெருமான்  இங்கு பனிரெண்டாம் வகுப்பு புதியதாக சேர்ந்து  பயின்று வருகிறார் வகுப்பு ஆசிரியர் ரமேஷ் என்பவர் தொடர்ந்து பள்ளியில் சேர்ந்த நாள் முதல்  மாணவனை ஒருமையில் பேசி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிய காரணத்தால் பள்ளிப்படிப்பை தொடர முடியாத வள்ளல் பெருமான் நிண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத காரணத்தினால் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிக்கல்வி ஆசிரியர் பயிற்றுநர் குழுவினர் இணைந்து   கிருஷ்ணாபுரம் தலைமை ஆசிரியர் உதவியுடன் வள்ளல் பெருமான் அவர்களின் வீட்டுக்கே நேரடியாக சென்று படிப்பை தொடர அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.



இதனைத் தொடர்ந்து நேற்று 06.11.2023 காலை 9.00 மணி அளவில்  பள்ளிக்கு தனது பெற்றோர் சக்திவேல் உடன் சென்ற வள்ளல் பெருமான் தலைமை ஆசிரியரை சந்தித்து விட்டு பின்னர் தலைமையாசிரியர் அவர்களின் அறிவுறுத்தலை கேட்டுக் கொண்டு தலைமை ஆசிரியர் அறையில் இருக்கும் பொழுது  அப்பொழுது அங்கு வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ரமேஷ் என்பவர் மாணவனை பார்த்தவுடன் ஆத்திரமடைந்து  ஒருமையில் உன்னை யார் பள்ளிக்குள் அனுமதித்தது வகுப்பு ஆசிரியராகிய என்னிடம் தெரிவிக்காமல் நீ எப்படி உள்ளே வந்தாய் திருட்டு நாயே வெளியே போ என்று  வன்மத்தோடு நீ எல்லாம் இந்த பள்ளியில் படிக்க கூடாது என்று பெற்றோரின் கண் முன்னே மாணவனை  ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது மேலும் இதனால் மணமுடைந்த மாணவன் தமிழக அரசு அறிவுறுத்தியும் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது.



பள்ளியின் தலைமை ஆசிரியரின் உத்தரவை மதிக்காமல் பள்ளியின் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலுடன்  ஆசிரியர்பயிற்றுநர் குழு BRT அனுப்பிய மாணவனை ஒருமையிலும்   பள்ளியில் வேதியல் ஆசிரியர் பேசி இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் முகசுழைப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இவர்  மாணவனை தொடர்ந்து மன அழுத்தத்தை கொடுத்து  தற்கொலைக்கு  தூண்டும் விதமாக பள்ளியில் பல செயல்களை செய்து வருவதாகவும் பள்ளி மாணவன் குற்றம் சாட்டி வருகின்றனர்.



தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் பயின்று விடுபட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினாலும் அரசுக்கு அவ பெயரை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற ஆசிரியர்கள் செயல்படுவது பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிருப்தியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.


எனவே தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற தவறுகளை செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.


பெற்றோரின் புகார் கடிதம்.


No comments:

Post a Comment

*/