கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மீரா பள்ளி எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் SDPI கட்சியின் சார்பில் நடைபெற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் மக்தூம் அலி மற்றும் பரங்கிப்பேட்டை நகர தலைவர் முகமது சையது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் பரங்கிப்பேட்டை நகர தலைவர் முகம்மது சையது அவர்கள் பேசிய போது இக்கால அரசியல் சூழ்நிலைக்கு மக்களாகிய நாமும் ஒரு அங்கம் வகிப்பது மறுக்க முடியாத ஒன்று யாரை நம்பினால் நமக்கான நீதி கிடைக்கும் என்று மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் ஒவ்வொரு முறையும் நம் வாக்கினை மட்டும் பகடகாயாக பயன்படுத்தி நம்மை இந்த அரசாங்கம் முட்டாள் ஆக்குகிறது என்று கூறினார்.
இனிமேலும் மக்கள் சிந்திக்காமல் செயல்பட்டால் இதில் முழு பங்கும் மக்களாகிய நமக்கு பெரும் ஆபத்தாக திரும்பும் என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறினார் இதில் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment