கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே ஆயிப்பேட்டை கிராம ஆற்றுப்பகுதி கரையில் அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய மாணவரணி துணைத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். பி. கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் பங்கேற்று அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் .இதன் பின்னர் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் தொடர்ந்து பனை விதைகளை ஆற்றின் கரைகளில் நடவு செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வில் ராமச்சந்திரன், கவியரசன், கார்த்திக், புருஷோத்தமன், ரவிச்சந்திரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று பனை விதை நடுவு பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment