அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பரம் வண்டி கேட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளர் K.A. பாண்டியன் கலந்து கொண்டு அதிமுக கொடியினை ஏற்றி வைத்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் திரு உருவசிலைக்கும், MGR அவர்களின் திருஉருவ சிலைக்கும், செல்வி ஜெயலலிதா அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம். பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த். ஒன்றிய குழு உறுப்பினர் ரெங்கம்மாள். கோவி.ராசாங்கம், ரெங்கசாமி, மாரிமுத்து, பரங்கிப்பேட்டை 10 வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment