கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோயில் அருகே SDPI கட்சி சார்பில் பாலஸ்தீனத்துடன் இந்தியா என்ற முழக்கத்தோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்ட தலைவர் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனருக்காக உலக நாடுகள் தலையிட வேண்டும் தாய் நாட்டிற்கான போராட்டம் பாலஸ்தீனருக்கான உரிமை என கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தினை சிதம்பரம் தொகுதி செயலாளர் துபைல் தொகுப்புரையாற்றினார் தொகுதி தலைவர் பஷீர் அகமத் வரவேற்புரை நிகழ்த்தினார் பொதுச் செயலாளர் முகமது அலி , மாவட்டத் துணைத் தலைவர் அஹமதுல்லா , மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாவட்ட செயலாளர் முகமது நாசர் அலி ,பரங்கிப்பேட்டை நகரத் தலைவர் முகம்மது செய்யத் முன்னிலை வகித்தனர் மாநில செயற்குழு உறுப்பினரும் விழுப்புரம் மண்டல செயலாளருமான எம்.ஏ. ஹமீது ஃப்ரோஜ் கண்டன உரை நிகழ்த்தினார் இதில் SDPI நிர்வாகிகள். இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள். பரங்கிப்பேட்டை பயனாளர் நல சங்க நிர்வாகிகள். பரங்கிப்பேட்டை தர்காக்கள் ஜமாத் நிர்வாகிகள். பரங்கிப்பேட்டை ஜமாத் நிர்வாகிகள். விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment