இதில் இளைய மகனான மிதுன் வயது 8 சென்னையில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில் மூத்த மகனான விஷ்ணு வயது 11 என்பவர் முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார், குடும்ப சூழலை காரணமாக விஷ்ணுவை அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை இதனால் அவர் தன்னுடைய உரிமையாளராகிய ரூபா என்பவரின் உதவியோடு கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் உள்ள வசந்தம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தனது மகன் விஷ்ணுவை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலில் தினமும் விஷ்ணுவிடம் பள்ளியில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார் அப்பொழுது அப்பள்ளியில் உள்ள ஊழியரிடம் தங்கள் மகனை முழுமையாக வீடியோ காலில் காமியுங்கள் என்று கேட்ட பொழுதெல்லாம் அவர்கள் காமிக்க மறுத்து முகத்தை மட்டுமே காமித்தவாறு அவரிடம் பேச வைத்துள்ளனர்
இந்நிலையில் பள்ளியில் சேர்த்த ஒரு சில நாட்களில் தனது மகன் கையில் புண் இருப்பதாகவும் இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கலாமா என்று பள்ளியிலிருந்து தொலைபேசி மூலம் மோகனப்பிரியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்னர் இவர் தனது மகனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தெரிவித்ததன் அடிப்படையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி மோகனப்பிரியா சென்னையிலிருந்து கிளம்பி தனது மகனை பார்க்க ஆசை ஆசையாக வடலூரில் உள்ள வசந்தம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய உண்டு உறைவிட பள்ளிக்கு சென்றுள்ளார் அப்பொழுது தனது மகன் விஷ்ணுவை பார்த்த பொழுது அவர் உடல் முழுவதும் புண்கள் வந்து உடல் மேலிந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி ஊழியர் ஒருவரிடம் கேட்டபொழுது அவர் முறையான பதில் அளிக்காததால் இவர் தனது மகனை அழைத்துகொண்டு சென்னை திரும்பி உள்ளார், பின்னர் இது குறித்து தான் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் ரூபாவிடம் தெரிவித்துள்ளார் பின்னர் ரூபா தனக்குத் தெரிந்த பிரபல செய்தி நிறுவனத்தில் வேலை செய்த தனது தோழியிடம் விஷ்ணுவின் உடல் முழுவதும் இருந்த புண்களை புகைப்படம் எடுத்து whatsapp மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஷ்ணுவின் பாதிப்பை உணர்ந்த மாற்றுத்திறனாளியான ரூபா நேரில் சென்று புகார் அளிக்க இயலாததால் சைல்ட் ஹெல்ப் லைன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்த நிலையில் கடந்த அக்டோபர் 13 தேதி வசந்தம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து மாற்றுத்திறனாளியான ரூபா தெரிவிக்கையில் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் 30 குழந்தைகள் பயின்று வருவதாக தெரிவித்து வருகின்றனர் ஆனால் ஒவ்வொரு முறை அங்கு செல்லும் பொழுதும் குழந்தைகள் குறித்த கேள்வி எழுப்பினால் அவர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளதாகவும் மழுப்பலான பதில்களை கூறி வருகின்றனர், மேலும் இப்பள்ளியின் மற்றொரு கிளை சேத்தியாத்தோப்பு பகுதியில் இயங்கி வருகின்றது அங்கு சுமார் 15 குழந்தைகள் தங்கி பயின்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் மாற்றுத்திறனாளி மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை, தன்னார்வலர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட ஒரு சிலர் இப்பள்ளியில் தங்களது பிறந்தநாள் மற்றும் விழா நாட்களில் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை மற்றும் சிறப்பு உணவு வழங்கி வருகின்றனர், அவையும் குழந்தைகளுக்கு முழுமையாக சென்றடைவது இல்லை என்று பல புகார்களை அடுக்கடுக்காக தெரிவித்தார்,
மேலும் பள்ளியில் பயிலும் குழந்தைகள் அடிக்கடி காணாமல் போவதும் அதனை அங்கு பணி புரியும் ஊழியர்கள் குழந்தைகளின் பெற்றோர்களுக்கே தகவல் தெரிவிக்காமல் தேடி வருவதும் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது எனவும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளி என்று பெயர் வைத்துக் கொண்டு எந்த ஊரு பள்ளி குறித்த செயல்பாடுகளும் அங்கு நடைபெறுவதில்லை. இன்றுவரை விஷ்ணுவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் விபரத்தை அவர்கள் தர மறுக்கின்றனர் என தெரிவித்தார்.
மேலும் விஷ்ணுவைப் போன்று பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களால் பராமரிக்க முடியாமல் இந்த காப்பகத்தில் விடப்பட்டுள்ளனர் அவர்களுக்கும் இதே போன்ற நிலை தொடர்கதை ஆகி வருகிறது, நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கும் திறனுடையவர்கள் ஆனால் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருமே மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் என்பதால் அவர்களால் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்ல இயலவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளில் நலன் கருதி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு இதுபோன்ற மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் இது போன்ற தனியார் தொண்டு நிறுவனங்களை முறையாக கண்காணித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment