குறிஞ்சிப்பாடி வழியாக காலை 8 மணிக்கு சரியான நேரத்திற்கு அரசு பேருந்தை தினசரி குறிஞ்சிப்பாடி வழியாக இயக்க கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 October 2023

குறிஞ்சிப்பாடி வழியாக காலை 8 மணிக்கு சரியான நேரத்திற்கு அரசு பேருந்தை தினசரி குறிஞ்சிப்பாடி வழியாக இயக்க கோரிக்கை.


குறிஞ்சிப்பாடி வழியாக செல்லும் பதிவு எண் TN 32-4601 பதிவு எண் TN 32- 4582 காலையில் அரசு பேருந்து வராததால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் முதல் அரசு அலுவலர்கள் வரை பயணம் செய்ய அவதி, குறிஞ்சிப்பாடி வழியாக  மேற்கண்ட  நேரத்திற்கு வரும் அரசு பேருந்தை தினசரி குறிஞ்சிப்பாடி வழியாக இயக்க கோரிக்கை.


குறிஞ்சிப்பாடி தாலுக்காவாக விளங்குவதால் இங்கிருந்து நெய்வேலி விருதாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் முதல் அரசு அலுவலகங்கள் செல்வதற்கு மாணவ மாணவிகளும் அரசு அலுவலர்களும் குறித்த நேரத்திற்கு  செல்ல வேண்டி இருப்பதால் காலையில் வீட்டை விட்டு  புறப்பட்டு தினசரி காலை 8 மணிக்கு வருகின்ற TN32-4601,TN32-4582 பதிவு எண் கொண்ட அரசு பேருந்தில் தினசரி பயணம் செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகத்திற்கு சென்று மக்களுக்கு சேவையாற்றியும் குறிப்பிட்ட நேரத்திற்கு படிப்பதற்கு பள்ளி கல்லூரி மாணவர்களும் சென்று வருகின்றனர். 


தற்போது மேற்கண்ட பேருந்துகள் கடந்த ஒரு வாரமாக சரியாக காலை நேரத்தில் குறிஞ்சிப்பாடி வழியாக விருதாச்சலம் செல்ல பேருந்தை இயக்காமல் இந்த இரண்டு பேருந்துகளையும் கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டிக்கு தடத்தில்  அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் இயக்கிவர நடவடிக்கை எடுத்துள்ளதால் இத்தனை ஆண்டுகளாக மேற்கண்ட பேருந்தில் தினசரி வடலூர் நெய்வேலி விருதாச்சலம்  செல்ல பயணம் செய்த பயணிகள் தற்போது கடந்த ஒரு வார காலமாக பயணம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 


மேலும் கடலூரில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்தும் திருப்பூருக்கு செல்லும் அரசு பேருந்தும் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் வழியாக வராமல் புறவழிச் சாலையிலேயே தினசரி செல்வதால் கடலூரில் ஏறி பயணம் செய்பவர்கள் ரயில்வே கேட் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டு செல்வதால் அங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்து குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் சாவடி யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தத்திற்கு 15 ரூபாய் செலவு செய்து செல்ல வேண்டிய வருகிறதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


இந்த இரண்டு பேருந்துகளையும் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் மார்க்கமாக இயக்க வேண்டும் எனவும் கடந்த ஒரு வார காலமாக பாலூர் வழியாக பண்ருட்டிக்கு இயக்குகின்ற இரண்டு பேருந்துகளையும் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் மார்க்கமாக விருதாச்சலத்திற்கு இயக்க வேண்டும் எனவும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் அரசு அலுவலர்களும் பொதுமக்களும்  கோரிக்கை வைக்கின்றனர் ஆகையால் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றனர். 


மேலும் இரவு 12 மணிக்கு மேல் திருச்சி மதுரையில் இருந்து கடலூருக்கு சென்று கொண்டிருக்கும் பேருந்துகள் குறிஞ்சிப்பாடி நகரப்  பகுதிக்குள் வராமல் புறவழிச் சாலையிலேயே செல்வதால் குறிஞ்சிப்பாடிக்கு வர முடியாமல் வடலூர் நெய்வேலியிலே காத்துக் கொண்டிருநது அதிகாலையில் வேறு பஸ்சை பிடித்து வருகின்ற அவநிலையை ஏற்படுகிறது. குறிஞ்சிப்பாடி அமைச்சர் தொகுதியாக இருந்தும் பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் இது போன்ற அட்டகாசங்களை செய்து வருகின்றனர் இவர்களை யார் அடக்குவது என பயணிகள்  முனுமுனுத்து செல்கின்றனர்.


ஆகையால் நள்ளிரவு நேரங்களில் வரும் பேருந்துகளையும் குறிஞ்சிப்பாடி புறவழிச் சாலை செல்லாமல் நகர்ப்புறவ வழிச்சாலையாக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/