'நீட்' தேர்வை ரத்துச் செய்யக்கோரி திமுக நடத்தும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் பெருந்திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் - கட்சியினருக்கு அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 October 2023

'நீட்' தேர்வை ரத்துச் செய்யக்கோரி திமுக நடத்தும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் பெருந்திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் - கட்சியினருக்கு அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்


'நீட்' தேர்வை ரத்துச் செய்யக்கோரி திமுக நடத்தும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் பெருந்திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் - கட்சியினருக்கு அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவுறுத்தல், இதுகுறித்து அமைச்சர் MRK பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் முக ஸ்டாலின்  அவர்களின் ஆணைக்கிணங்க,  இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு (ம) சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து 'நீட்' தேர்வை ரத்துச் செய்யக்கோரி மாபெரும் ' கையெழுத்து இயக்கம் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 21.10.2023 அன்று காலை மணியளவில் காட்டுமன்னார்கோவில் , கிருஷ்ணமஹால் ஏ.சி. எம்.ஆர்.கே. பொறியியல் கல்லூரி எதிரில்  நடைபெறவுள்ளது.

அதுசமயம், கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில , மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாநகர மேயர், ஒன்றிய குழுத்தலைவர்கள், மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் 'நீட்' தேர்வு ரத்துச்செய்யகோரி நடைபெறும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் பெருந்திரளாக கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/