இந்நிலையில் இன்று நான்கு முனை சந்திப்பு அருகே போக்குவரத்து போலீசார் இல்லாததால் மிகுந்த வாகன நெரிசல் ஏற்பட்டது வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்ததால் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
நான்கு சாலைகளில் இருந்தும் வாகன ஓட்டிகள் நான்கு முனை சந்திப்பை கடந்து செல்ல முயற்சித்ததால் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டனர் இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இது போன்ற சம்பவம் வடலூர் நான்கு முனை சந்திப்பில் தொடர் விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் தொடர்கதை ஆகி வருகிறது இதுகுறித்து போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபொழுது அவர்கள் நாங்கள் இரண்டு நபர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளோம் இதனால் போக்குவரத்தை சீர் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது எனவே கூடுதல் போலீசாரை நியமித்தால் இதுபோன்ற சம்பவம் நிகழாது என்று தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment