கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் , அண்ணா மார்க்கெட் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ .5.03 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் , சண்முகம் தெரு பகுதியில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ .0.64 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், கம்மியம்பேட்டை முதல் போடிசெட்டித் தெரு பகுதியில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ.0.68.கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், கம்மியம்பேட்டை பகுதியில் சிறப்பு நிதியின் கீழ் ரூ .2.50 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மண்டல அலுவலகம் (III) கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், கருமாரப்பேட்டை, துரைசாமி நகர், தேவனாம்பட்டினம் ரோடு, சகுந்தாலா நகர், அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ : 1.94 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறித்தினார், இவ்வாய்வில் மாநகராட்சி ஆணையாளர், மு.காந்திராஜ் அவர்கள், மாநகர பொறியாளர் குருசாமி அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment