கடலூர் தெற்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நடுவீரப்பட்டு பகுதியில் அதிமுகவின் 52 ஆம் ஆண்டு கழக தொடக்க விழா பொதுக்கூட்டம் கழக அமைப்புச் செயலாளரும் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது, கடலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வினோத் வரவேற்புரையாற்றினார்.
இதில் தலைமைக் கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சொரத்தூர் இராஜேந்திரன் பேசுகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறகு கழகத்தினை தலைமை ஏற்று வழிநடத்த நான் இருக்கிறேன் கட்சி நிர்வாகிகளின் ஆதரவோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் இயக்கத்தை தலைமையேற்று வழிநடத்தி வருபவர் தான் எடப்பாடியார், மீண்டும் தமிழகத்திற்கு எந்த தேர்தல் வந்தாலும் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழங்குவார் என்று பேசினார்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது நாட்டு மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பு இல்லை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியது போல் எனக்கு பின்னாலும் இந்த ஆட்சி நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் நாட்டின் அனைத்து தாய்மார்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக அள்ளிக் கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கிள்ளிக் கொடுக்க மனம் இல்லாதவர் கலைஞர் கருணாநிதி அவர் வழியில் அவர் மகன் ஸ்டாலின் சொரத்தூர் ராஜேந்திரன் பேச்சு.
இதில் மாநில தொழிற்சங்க இணைச் செயலாளர் சூரியமூர்த்தி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜசேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமலிங்கம், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ராஜா,ஒன்றிய பெருந்தலைவர் கலையரசி கோவிந்தராஜ்,கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப துணை தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் வடக்குத்துக் கோவிந்தராஜ், பாஷியம், கமலக்கண்ணன், நகரச் செயலாளர் பாபு, கோவிந்தராஜ், குறிஞ்சிப்பாடி பேரவை செயலாளர் ஆனந்தபாஸ்கர், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம், மாவட்ட இணை செயலாளர் பிரேமா மோகன், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானசெல்விகல்யாணசுந்தரம், மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தராஜ்,மாவட்ட பொருளாளர் தேவநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டுரங்கன் சத்தியஅன்பு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment