கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ஓ.பி.ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அருட்செல்வர் மகாலிங்கம் கலையரங்கத்தில் 'வடலூர் தமிழ்ச்சங்கம் மற்றும் வள்ளலார் முத்தமிழ் பேரவை சார்பில் வள்ளலார் 200, தமிழ்சங்கவிருது வழங்கல் மற்றும் வள்ளலார் வாழ்வியல் நெறி, நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
ஓ.பி.ஆர் கல்லூரி தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ் சங்க நிறுவனர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார், நிகழ்ச்சியில் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டது, பின்னர் தேர்வு செய்யப்பட்ட தமிழ் கவிஞர்களுக்கு விருதுகலும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, "வள்ளலார் வாழ்வியல் நெறி"நூலினை டாக்டர் செல்வராஜ் வெளியிட, டி.ஆர்.எம் கல்வி ஆறக்கட்டளை நிறுவனர் ராஜமாரியப்பன் நூலினை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, கவியரங்கம், கருத்தரங்கம் மற்றும் மாணவர்களின் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இறுதியில் கலை நிகழ்ச்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:
Post a Comment