கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் சார்பாக ஆங்கில இலக்கிய மன்ற விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆங்கில துறை தலைவர் திருமதி C.கவிதா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைகழக ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் முனைவர் T. தெய்வசிகாமணி அவர்கள் கலந்துகொண்டு Emergin Trends in English Literature என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஆங்கில துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் K.மகேந்திரவர்மன் அவர்கள் எழுதிய Voice of the Marginalized என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. சிறந்த சமூக சேவை புரிந்த கௌரவ விரிவுரையாளர் முனைவர் S. கோபிநாத் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க பட்டது. ஆங்கில இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் R. நிஷா நன்றியுரை வழங்கினார். விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் 500 மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். விழாவினை ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment