கீரப்பாளையம் பகுதிகளில் சம்பா நடவு வயல்களில் பாசிகள் சூழ்வதால் விவசாயிகள் வேதனை. விவசாய அதிகாரிகளுக்கு கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 October 2023

கீரப்பாளையம் பகுதிகளில் சம்பா நடவு வயல்களில் பாசிகள் சூழ்வதால் விவசாயிகள் வேதனை. விவசாய அதிகாரிகளுக்கு கோரிக்கை.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டார வேளாண்மை துறைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது வாய்க்கால் பாசனம் மற்றும் போர்வெல் பாசனம் என இரண்டு விதமான பாசனத்தின் மூலம் சம்பா நெல் நடவுப்பணி நடைபெற்று வருகிறது. கை நடுவு, மெஷின் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு என மூன்று விதங்களில் நடவுப்பணிகள் நடைபெற்றுள்ளது. 


இந்நிலையில் இப்போது விவசாயிகளுக்கு பெரும் தொந்தரவாகவும், வேதனை தருவதாகவும் இருப்பது சம்பா நடவுப பயிர்கள் உள்ள வயல்களில்பாசிகள் சூழ்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஏனெனில் பாசிகள் பயிர் வளர்ச்சியை தடுப்பதாகவும் மற்றும் நெல் பயிர்களுக்கு இடும் உரம் மற்றும் தெளிக்கப்படும் மருந்துகள் போன்றவை நேரடியாக பயிர்களின் வேருக்கு செல்லாமல் இந்த பாசிகள் அதை தடுத்து விடுவதாகவும் விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். 


இதனை வயலில் இருந்து எத்தனை முறை அப்புறப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வயலில வருகின்றன. மேலும் வயல் முழுவதும் பரவி விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நடவு செய்யப்பட்டுள்ள நாற்றுகள் பரிந்துரைக்கப்பட்ட நெல் விதையிலிருந்து உருவாக்கப்பட்டது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தெளிக்கப்பட்டது என அனைத்துமே வேளாண்மைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்ட மருந்துகளால் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும் எப்படி இந்த பாசிகள் பயிர்களை சூழ்ந்து நெல் பயிரை சேதமாக்கி வருகிறது என  விவசாயிகள் காரணம் புரியாமல்  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 


வேளாண்மை துறை அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து எங்களின் அச்சத்தை போக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

*/